--- --:--:-- --

காவல் துணை ஆணையருக்கு முதல்வர் டுவிட்டரில் பாராட்டு

11

காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு உதாரணமாக நெல்லை மாநகர காவல் துணை ஆணையரின் செயல்பாடு உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் காவலர்களை ஒருங்கிணைத்து வேர்களைத்தேடி என்ற அமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு உதவிகளையும் சட்ட நடவடிக்கைகளையும் செய்து வருகிறார்.

 

தற்போது ஊரடங்கு காரணமாக தவிக்கும் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் வழங்கி வருகிறார். சமூக வலைதளங்கள் வழியாகவும் உடனடியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வெளிநாட்டில் பணிபுரியும் ராஜா என்பவர் தங்கள் பெற்றோருக்கு உதவ அவசர சேவை தொலைபேசி எண்களை கேட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து காவல் துணை ஆணையர் சரவணன் ராஜாவின் பெற்றோரை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை வழங்கினார். இவரின் பணிகளும் சேவைகளும் தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி ட்விட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon