--- --:--:-- --

காய்கறிகளை விற்க வந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழப்பு…!

4

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே விளை பொருட்களை விற்பதற்காக நின்று கொண்டிருந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் வாணியம்பாடி முழுவதும் முற்றிலும் முடக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கான பொருள்கள் வீடுகளுக்கே சென்று விநியோகிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

 

அதன்படி விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொருட்களை பெற்று உழவர் சந்தை அதிகாரிகள் மூலம் மக்களுக்கு விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதற்காக தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகளிடமிருந்து விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காய்கறிகளை திருமணத்திற்காக காத்திருந்த ஓமகுப்பம் பகுதியை சேர்ந்த விவசாயி உமாபதி திடீரென மயங்கி விழுந்தார்.

 

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்னையில் கொரொனா பாதிப்பால் உயிர் இறந்தோரின் உடல்களை தகனம் செய்ய தனியாக மின்மயானம் ஒதுக்க வேண்டுமென காவலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

 

மருத்துவர் ஒருவர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அவரது உடலை மின்மயானத்தில் தகனம் செய்ய பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வராமல் இருக்க சென்னையில் கொரொனா பாதிப்பால் உயிர் இறந்தவர்களை தகனம் செய்வதற்காக தனியாக மின் மயானத்தை ஒதுக்க பல்வேறு காவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையில் தடையை மீறி காற்றாடியை பறக்க விட்ட 11 சிறுவர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். பட்டத்தினால் பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததால் சென்னையில் பட்டம் விட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் முடங்கி விட இளைஞர்கள் மீண்டும் பட்டம் விட செயலில் இறங்கியுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

மேலும் மொட்டை மாடிகளில் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால் பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர் சைதாப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டம் விட்டதாக 6 பேரையும் பிடித்தனர். அவர்களிடமிருந்து பட்டமும் மாஞ்சா கயிறு பறிமுதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Right Menu Icon