4ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை…அதிர்ச்சி!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நான்காம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடராஜ பிள்ளை தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் நான்காம் வகுப்பு பயின்று வந்த தனது 9 வயது மகன் மதன் சாப்பிடும்போது தொல்லை செய்ததால் கடிந்துகொண்டார்.
இதனால் மனமுடைந்த மகன் வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலை என வழக்குப் பதிவு செய்திருக்கும் போலீசார் 9 வயது சிறுவன் தற்கொலை செய்து கொள்வது சாத்தியமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.







