--- --:--:-- --

டெல்லி சென்று வந்தவர் என நினைத்து கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட மளிகைக்கடைக்காரர்

12

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மளிகை கடை நடத்தி வரும் இளைஞரை டெல்லி சென்று வந்ததாக கருதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாளவந்தி கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை தனது வீட்டின் ஒரு பகுதியில் சிறிய மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

 

அவரது வீட்டிற்கு வந்த வருவாய் சுகாதாரம் மற்றும் காவல்துறையினர் டெல்லி சென்றுவிட்டு வந்து சோதனைக்கு வராமல் இருப்பதாக கூறி விசாரித்துள்ளனர். தான் டெல்லி செல்லவில்லை என்றும் ஊரை விட்டு எங்கும் தான் வெளியே போகவில்லை என்றும் செல்லதுரை கூறியதை அதிகாரிகள் ஏற்கவில்லை. சந்தேகத்திற்குரிய விமான டிக்கெட்டை பரிசோதித்தபோது பயணம் செய்தவர்கள் என்று இருந்தது.

 

அதிலிருந்து முகவரியும் ஆதார் எண்ணும் செல்லதுரைக்கு உரியதாக இருந்ததால் அவரை வலுக்கட்டாயமாக திருச்சி மருத்துவமனையில் சிறப்பு வார்டுக்கு கொண்டு சென்றனர். செல்லதுரையின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. செல்லதுரைக்கு கொரொனா இல்லை என உறுதியானது.

 

இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து செல்லதுரையின் முகவரி ஆதார் எண்ணை கொண்டு தமிழகம் வந்தது யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon