தமிழ்நாடு உள்ள வெளவால்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் இரண்டு வெவ்வேறு வகையான வௌவால்களுக்கு கொரொனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஐ சி எம் ஆர் என அழைக்கப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. வவ்வால் பறக்க வல்ல முதுகெலும்புள்ள பாலூட்டி ஆகும். இவற்றில் பழந்திண்ணி வவ்வால்கள் மூலம் கொரொனா பரவி இருக்கலாம் என ஐயம் எழுந்தது.
இதையடுத்து கர்நாடகா, குஜராத், ஒரிசா, பஞ்சாப், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, இமாச்சலப் பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் வௌவால்களுக்கு கொரொனா பரிசோதனை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வவ்வாலுக்கு கொரொனா தொற்றிருப்பதை கண்டறிந்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







