சிவகங்கையில் 4 வயது சிறுமிக்கு கொரோனா உறுதி!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 4 வயது சிறுமிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த சிறுமி இருந்த மீனாட்சிபுரம் மகபூப்பாளையம் பள்ளிவாசல் தெரு பகுதி முழுவதும் தகரம் வைத்து மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதி முழுவதும் தடுப்பு ஏற்படுத்தி கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நாகையில் கல்குவாரி மூடப்பட்டதால் சொந்த ஊருக்கு நடந்தே கிளம்பிய கூலித்தொழிலாளர்கள் தற்போது வழிமாறி பழனி வந்தடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள கல்குவாரி மூடப்பட்டது.

இதனால் அங்கு பணிபுரிந்து வந்த கூலித் தொழிலாளர்கள் 6 பேர் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர்.போக்குவரத்தும் முடக்கப்பட்டு இருப்பதால் நடை பயணமாகவே அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தனர். அதன்படி வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டி மன்னார்குடி வழியாக திருச்சி வந்த அவர்கள் அங்கிருந்து திருவண்ணாமலை செல்வதற்கு பதிலாக வழிமாறி திண்டுக்கல் வழியாக பழனி வந்தடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்து மீண்டு திருவண்ணாமலைக்கு நடந்தே செல்வதாக கூறிய அவர்களுக்கு வாகன வசதி செய்து தர சில தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டுமென கல் குவாரி தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.







