--- --:--:-- --

16 கோடி முதியவர்களை “கொரோனா” தாக்க வாய்ப்பு?

9

கொரொனா தாக்கத்தை முன்னிட்டு மத்திய அரசு முதியோருக்கான அறிவுறுத்தல்களை அளித்துள்ளது. மத்திய சமூக நீதி அமைச்சகம் சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர் 16 கோடி பேர் இறப்பதாகவும் அவர்கள் உடற்கூறியியலில் கொரொனா பாதிப்பிற்கான சாத்தியக்கூறு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா அறிகுறிகள் இருப்பவர்களின் அருகில் செல்லக்கூடாது, கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்லக்கூடாது வெறும் கையால் மூடிக் கொண்டு இருக்கவும் கூடாது சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும் வழக்கமான மருத்துவ சோதனைகளுக்கு மருத்துவமனைகளுக்கு செல்ல கூடாது. தனிமையை எதிர்கொள்ள புகையிலை மது உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon