ஊரடங்கின் போது 1400 கி.மீ தூரம் சென்று அழைத்து வந்த தாய்!
ஆந்திராவில் நெல்லூரில் இருந்து நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள தமது ஊருக்கு மகனை அழைத்து வர ஒரு தாய் சுமார் 1400 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் பயணித்தார். ரசியா பேகம் என்ற ஆசிரியை 700 கிலோ மீட்டர் தூரமுள்ள நெல்லூருக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை காலை புறப்பட்டு சென்றார்.
வேலூரில் தனது நண்பன் வீட்டில் சிக்கியிருந்த 17 வயது மகனை அழைத்து வந்தவர் பல்வேறு இடங்களில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆயினும் முன்கூட்டியே காவல்துறையின் அனுமதி கடிதத்தை பெற்றிருந்ததால் அவர் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்.புதன்கிழமை அவர் தனது மகனை சொந்த ஊருக்கு அழைத்து வந்துவிட்டார்.







