தப்லிக் ஜமாத் தலைவருக்கு கொரோனா பரிசோதனை
தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா ஆசாத் டெல்லியில் தனது வீட்டில் சுய தனிமை படுத்துதலில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்ட நிலையில் அவருக்கு பரிசோதனை நடத்தப்படவுள்ளது. அரசு உத்தரவை மீறி கூட்டம் கூடியதாக மவுலானா ஆசாத் உள்ளிட்ட 7 தப்லீக் ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் டெல்லி குற்றவியல் போலீசார் நோட்டீஸ் அனுப்பிய போது தனிமையில் இருப்பதாக மவுலானா ஆசாத் பதிலளித்திருந்தார்.எனவே அந்த நகரில் உள்ள தனது வீட்டில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு கொரொனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதோடு அரசியல் தனிமை முகாமுக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வீடியோகால் மூலம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







