ஊரடங்கு காலத்தில் வைரலாகி வரும் பிறந்தாநாள் டிக் டாக் வீடியோக்கள்!
கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி ஆரத்தழுவி வாழ்த்து சொல்வது ஊரடங்கிற்கு முந்தைய காலம். இந்த ஊரடங்கு காலகட்டத்தில் சிலர் தங்களது சமூக விதிகளை பின்பற்றி வீட்டிற்குள்ளேயே வித்தியாசமாக கொண்டாடி வருகின்றனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் தங்களுடைய பிறந்தநாளில் இப்படித்தான் கொண்டாடி வருகின்றனர்.

கேக் வாங்க முடியாத பலர் இப்படி பழங்களைக் கொண்டும், கேக் என எழுதி வைத்தும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.இன்னும் சில வீடுகளில் அரசு அறிவுறுத்தி வரும் சமூக இடைவெளியை பின்பற்றி தங்களுடைய குடும்பத்தோடு பிறந்தநாளை கொண்டாடி டிக்டாக்கில் பதிவிட்டு அதன் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.







