கேரளாவை போல் தமிழகத்திலும் மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரிக்கை!
கேரளாவில் மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்கியதை போன்று தமிழகத்திலும் அரசு அனுமதி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்டை மாநிலமான கேரளாவில் மீன்பிடி தடையின்றி கிடைப்பதாக நாட்டுப்படகு கட்டுமரங்களில் அன்றாட மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
அது போன்று தமிழகத்திலும் 13 கடலோர மாவட்டங்களிலும் கட்டுமரம் மற்றும் நாட்டு படகுகளில் மீன்பிடிக்க அரசு ஆணை பிறப்பித்தது.மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.







