--- --:--:-- --

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

15

கொரொனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தஞ்சை மாவட்டத்தில் 11 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 32 வயதுடைய தஞ்சையை சேர்ந்த பெண்ணுக்கு தஞ்சை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

 

அந்த தாய்க்கும் குழந்தைக்கும் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் தொடர் காய்ச்சல் இருமல், சளி ஆகிய அறிகுறிகளுடன் 108 ஆண்களும், 28 பெண்களும் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்நிலையில் கொரொனா சிறப்பு பார்வையிட தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Leave a Reply

Right Menu Icon