மளிகைப்பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடைக்கு சீல்
மளிகை பொருட்களை கூடுதல் விலை வைத்து விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நெருக்கடியான காலகட்டத்தில் வியாபாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பூதலூர் அருகே பாம்பை சித்திரவதை செய்து பல்லை பிடுங்கியவர் வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். யுவராஜ் என்பவர் இரண்டு நாட்களுக்கு முன் தனது வீட்டின் அருகே பாம்பு ஒன்றை பிடித்து மக்கள் மத்தியில் விளையாட்டாக வித்தை காட்டினார். பாம்பின் பற்களை பிடுங்கி எறிந்த அவர் அதை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட வனத்துறையினர் அவரை வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.







