--- --:--:-- --

இந்தியாவில் ஊரடங்கை நீட்டித்த முதல் மாநிலமானது ஒடிசா ..! ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு..! ஜூன் 17 வரை கல்வி நிறுவனங்கள் மூடல்!!

unnamed

கொரோனா பரவல் தடுப்பு நடவடிவடிக்கையாக, இந்தியாவில் முதல் மாநிலமாக ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஜூன் 17-ந் தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

 

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் இப்போது விஸ்வருபம் எடுத்து வருகிறது. இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநிலமே இல்லை என்ற அளவுக்கு நாடு முழுவதும் பரவலாக பரவி வருகிறது. இதனால், கொரோணா தடுப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14-ந் தேதி வரை 3 வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இந்த ஊரடங்கை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பல்வேறு மாநிலங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன,

இதற்கிடையே, ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில், அம்மாநிலத்தில் வரும் ஏப்ரல் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதனால் ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30-ந் தேதி வரை ரயில், விமானங்களை இயக்க வேண்டாம் என்ற கோரிக்கையையும் மத்திய அரசுக்கு நவீன் பட்நாயக் வைத்துள்ளார்.

 

மேலும் அம்மாநிலத்தில், கல்வி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறை ஜூன் 17-ந் தேதி நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்பையும் நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ளார். இதனால் இந்தியாவில் ஊரடங்கை நீட்டிப்பு செய்த முதல் மாநிலமாக ஒடிசா திகழ்கிறது. ஒடிசாவைத் தொடர்ந்து மேலும் பல மாநிலங்களும் இதே போல் ஊரடங்கை நீட்டிப்பு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon