இராமநாதபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வரும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை எம்.மணிகண்டன் எம் எல் ஏ வழங்கினார்!
இன்று ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியை சார்ந்த, பட்டணம்காத்தான் அருகே உள்ள குடிசை மாற்று வாரியத்தின் அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன.
தற்போது உள்ள சூழலில் மிகவும் சிரமப்பட்டு வருவதாக இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து அங்கு வசித்து வரும் மக்களை நேரில் சந்தித்து பேசினார்.

உடனடியாக இந்த குடியிருப்பில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 15 நாட்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் தரம் உள்ள சமையல் பொருட்களை, கழக மருத்துவ அணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சரும், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.எம்.மணிகண்டன் அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வும், அறிவுரைகளையும் கூறி முகக்கவசம் மற்றும் மேற்கண்ட பொருட்களை வழங்கினார்.






