நிறைமாத கர்ப்பிணிகளுக்கு இலவச கார் சேவை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நிறைமாத கர்ப்பிணிகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்க சென்னையில் இளைஞர் ஒருவர் உதவி செய்து வருகிறார். கார் ஒன்றில் 9 மாத கர்ப்பிணி ஒருவரை அழைத்து செல்லும் இவர்தான் லியோ ஆகாஷ் ராஜ். ஆவடியை சேர்ந்த இவர் தாம்பரத்தில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.

 

ஊரடங்கால் கர்ப்பிணிகள் மருத்துவமனைகளுக்கு உரிய நேரத்தில் சென்று பரிசோதனை செய்து கொள்ள இலவச போக்குவரத்து சேவையை அளிக்கிறார் இவர். கடந்த 13 நாட்களில் 43 கர்ப்பிணிகளுக்கு இவர் உதவி செய்துள்ளார். இவர்களில் 23 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது.

லியோ ஆகாஷ் ராஜ் தனது செல்போன் எண்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளதால் தினமும் குறைந்தது 30 கர்ப்பிணிகளிடம் இருந்து அழைப்பு வருகிறது என்கிறார். நிறை மாதத்தில் இருக்கும் போது லியோ சேவை பெரிதும் உதவுவதாக கூறுகிறார் கர்ப்பிணிகள்.

 

தமிழகம் முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் பிரசவ தேதியுடன் ஒன்றரை லட்சம் கர்ப்பிணிகள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. அனைவருக்கும் இது போன்ற இலவச போக்குவரத்து சேவை கிடைத்தால் ஊரடங்கு நேரத்தில் உதவியாக இருக்கும் என்கிறார்கள் கர்ப்பிணிகள்.


Leave a Reply