--- --:--:-- --

நாளை இரவு மின் விளக்கை மட்டும் அணையுங்கள்..! அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விடாதீர்கள்…! மின்சார வாரியம் வேண்டுகோள்!!

16

கொரோனாவுக்கு எதிரான போரில், ஒம் நாட்டு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்த நாடு முழுவதும் நாளை இரவு 9 மணிக்கு வீடுகளில் அனைத்து மின் விளக்குகளை அணைத்து விட்டு, தீப ஒளி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் ஆர்வக் கோளாறில் வீட்டில் உள்ள அனைத்து மின் சாதனங்களையும் அணைத்து விடாதீர்கள்; விளக்குகளை மட்டும் ஆப் செய்யுங்கள் என தமிழ்நாடு மின் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

கொலைகார கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கோரத்தாண்டவத்தை தொடங்க ஆரம்பித்துள்ளது. கடந்த நான்கைந்து நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை விறுவிறுவென விஸ்வரூபமெடுத்து 3000 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்பாக 3-வது முறையாக பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தினார்.

 

அப்போது, கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றத் தொடங்கியுள்ளது. நமது ஒற்றுமையை உணர்த்தும் வகையில் நாளை இரவு 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணைத்து, வீடுகள் தோறும் அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது மொபைல் போன் டார்ச் ஏற்றி ஒளி பாய்ச்சுங்கள் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

 

பிரதமர் மோடியின் இந்த அழைப்புக்கு நாடு முழுவதும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என குரல்கள் எழுந்தாலும் நாளை இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைக்குமாறு பெரும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் பிரதமர் மோடி அறிவித்தபடி நாளை இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை மட்டுமே அணையுங்கள். எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் பிரிட்ஜ் உள்ளிட்ட உபகரணங்களை அணைக்க வேண்டாம் என தமிழக மீன்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அனைத்து மின் உபகரணங்களையும் அணைத்துவிட்டு திடீரென ஆன் செய்தால் மின்சாரம் தடைபட வாய்ப்பு உள்ளது.

 

ஏசி வைத்திருப்பவர்கள் ஏசியை ஆன் செய்துவிட்டு மின்விளக்குகளை அணையுங்கள். பவர் பிளக்ஸ்வேஷன் என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்ததே. முடிந்தவரை விளக்குகளை தவிர மற்றவற்றை ஆன் செய்து வைத்தால் மின் விநியோகத்தில் எந்த கோளாறும் இராது என்று மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

மின் கட்டமைப்பில் பழுது ஏற்பட்டால் மின் தடை ஏற்படுவதுடன் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அனைத்து மருத்துவமனைகளும் அவற்றின் முக்கியமான மின்சார விநியோகத்தை இழக்கக்கூடும் என்று தெரிவித்துள்ள மின் வாரியம், நாளை இரவு அனைத்து மின் ஊழியர்களும் அதிகாரிகளும் உஷார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon