--- --:--:-- --

கொரோனாவால் பிறந்து 6 வாரமே ஆன குழந்தை பலி!

5

அமெரிக்காவில் கொரொனா வைரஸ் பாதிப்பிற்கு பிறந்த ஆறு வாரங்களே ஆன குழந்தை பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடி வருகிறது.

 

குறிப்பாக நியூயார்க், நியூஜெர்சி ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் வைரஸ் பாதிப்புக்கு ஒன்றரை மாத கைக்குழந்தை உயிரிழந்தது.

 

இதை உறுதி செய்துள்ள கென்னடிக் மாகாண ஆளுநர் கொரொனா அறிகுறியுடன் கடந்த மாதம் ஒன்றரை மாத குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததுவிட்டதாகவும் கூறினார். இந்த சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon