--- --:--:-- --

நிஜாமுதீன் மாநாட்டில் பெரிய அளவில் கொரொனா பரவியிருக்கலாம்…!

2

டெல்லி அருகே நிஜாமுதீன்னில் நடைபெற்ற ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 157 பேர் உட்பட நூற்றுக்கணக்கானோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க டெல்லி அரசுக்கு காவல் துறையின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. நிஜாமுதீன்னில் தடை உத்தரவை மீறி நடைபெற்ற மாநாடு, அறியாமையால் நடைபெற்ற கிரிமினல் குற்றம் என்று முதலமைச்சர் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

 

அந்த மாநாட்டில் கலந்து கொண்ட பலர் டெல்லியில் உள்ள 16 மசூதிகளில் தங்க வைக்கப்பட்டனர். இதில் கொரொனா பெரிய அளவில் பரவியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. நிஜாமுதீன் மாநாடு நடைபெற்ற கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் டெல்லி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை ஆயிரத்து 34 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதில் 334 பேர் மருத்துவமனைகளில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் 24 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

15 மாநிலங்களில் இருந்து வந்த இந்த மாநாட்டில் கலந்துகொண்ட 3 ஆயிரம் பேரை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் 2,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரத்து 600 பேரில் இருப்பிடம் தெரியவில்லை. அவர்களின் தொலைபேசி எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon