--- --:--:-- --

ஏர்டெல் அறிவித்துள்ள சலுகை…இன்கமிங் வசதி இலவசம்!

13

பி‌எஸ்‌என்‌எல்- ஐ தொடர்ந்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை இன்கமிங் வசதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்து ரூபாய் காண டால்க் டைம் இலவசம் என்றும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதையொட்டி செல்போன் ரீசார்ஜ் செய்வதில் பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 20ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்ய வேண்டியது இல்லை என்று அறிவித்தது.

 

இதன்படி தொலைத்தொடர்பு சேவையை வழங்கிவரும் பிஎஸ்என்எல் எம்டிஎன்எல் ஆகியவற்றின் வாடிக்கையாளர்களுக்கு பிரிபெய்டு செல்பேசி சேவை வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இதை தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கியுள்ளது. இதன்படி ஏப்ரல் 17-ஆம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு இன்கமிங் வசதி இலவசம் என்றும், பத்து ரூபாய்க்கு டாக்டைம் இலவசமாக வழங்கப்படும் என்றும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon