அதிக விலைக்கு காய்கறி விற்பனை செய்த வியாபாரி கைது

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கடலூரில் அதிக விலைக்கு காய்கறிகளை விற்றதாக வியாபாரி ஒருவரை போலீசார் கைது செய்தனர். மஞ்சகுப்பம் அண்ணா சந்தை கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலும் மஞ்சை நகர் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து மாவட்ட ஆட்சியர் அன்புசெழியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகளிடமிருந்து கிலோ 12 ரூபாய்க்கு கொள்முதல் செய்த கத்தரிக்காயை சுரேஷ் என்ற வியாபாரி 50 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

 

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .மேலும் அதிக விலைக்கு விற்கப்பட்ட காய்கறிகள் நகராட்சி சார்பில் பறிமுதல் செய்யப்பட்டது.


Leave a Reply