--- --:--:-- --

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய காவலர்கள்!

6

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள ஆதரவற்றோருக்கு காவல்துறையினர் உணவு வழங்கினார். கொரொனாவால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அனைத்து போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள ஆதரவற்றோருக்கு சென்ட்ரல் ரயில்வே போலீசார் மதிய உணவு வழங்கினார்கள். ஆய்வாளர் சசிகலா தலைமையில் போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்தை சுற்றி இருந்த ஆதரவற்றவர்களை தேடித்தேடி சென்று உணவு வழங்கினார். மேலும் கொரொனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon