ஊரடங்கு உத்தரவு எதிரொலி : இராமநாதபுரத்தில் உணவின்றி தவிப் போருக்கு 7-வது நாளாக பசி தீர்க்கும் தாய்ப்பாசம் அறக்கட்டளை
கொரானா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை தனிமைப் படுத்திட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், ராமநாதபுரத்தில் உணவின்றி தவிப்போருக்கு ஏழாவது நாளாக தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பில் உணவு வழங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், ராமநாதபுரத்தில் உணவகங்களும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள், புறநோயாளிகள் என பலர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு துணையாக உள்ள உறவினர்கள் உணவு கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக தாய்ப்பாசம் அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா நூருல் சமது மற்றும் பொருளாளர் சீனி ஸ்டார் டிபன் சென்டர் இந்த இருவரும் மருத்துவமனையில் உணவின்றி தவித்து வந்த மக்களுக்கும் ஆங்காங்கே சாலையோரங்களில் உணவின்றி தவிக்கும் நபர்களுக்கும் உணவு பொட்டலங்களை ஐந்து நாட்களாக வழங்கி வந்தனர்.
மேலும் இரவு நேரங்களில் மருத்துவமனை வளாகத்தில் பணி புரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என அனைவருக்கும் தேனீர் வழங்கினர், அதனைத்தொடர்ந்து நேற்று 6-வது நாளாக பெரியபட்டினம் பாப்பு கனி அறக்கட்டளை தாய்ப்பாசம் அறக்கட்டளையுடன் இணைந்து உணவு வழங்கினர்.

இந்நிலையில், இன்று ஏழாவது நாளாக அம்பத்தூர் ராயல் ஷெரிப் குடும்பத்தார்கள் சார்பில் உணவு தயாரித்து உணவு. பொட்டலங்கள் வழங்கப்பட்டது.







