--- --:--:-- --

சென்னையில் 24 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

9

சென்னை மாநகராட்சியில் மட்டும் 24 ஆயிரம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.கொரொனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்ட அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது பொதுமக்கள் சமூக விலகியிருத்தலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றார். போலியோவை விரட்டியடித்த பெருமை இந்தியாவிற்கு உண்டு என்று குறிப்பிட்ட அவர் கொரொனாவையும் விரட்டியடிக்க வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

 

கொரொனா தொடர்பான சந்தேகங்களுக்கு 0 4 4 என்ற இணைப்பு எண்ணுடன் 2 5 3 8 4 5 2 0 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார். சென்னை மாநகராட்சியில் மட்டும் 24 ஆயிரம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

 

குடிசை பகுதி மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், இயந்திரங்களின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி மண்டல வாரியாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Right Menu Icon