கொரோனா எதிரொலி காரணமாக நாளை முதல் சிலிண்டர் விநியோகம் இல்லை கேஸ் ஏஜென்சி அறிவிப்பு! வாடிக்கையாளர்கள் அவதி !!!
தமிழக அரசு கொரோனா எதிரொலி காரணமாக 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை தொடரும் என மத்திய அரசும் அறிவித்துள்ளது.எனினும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க எந்த நிபந்தனையும் இல்லை என அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கோவை கணபதி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கேஸ் ஏஜென்சி வாடிக்கையாளர்களின் வீட்டில் சிலிண்டர் கொடுக்காமல் ஒரு இடத்தில் சிலிண்டரை வைத்து அவர்களையே எடுத்துச்சொல்ல வற்புறுத்துகின்றனர். இதனால் வயதானவர்கள் தங்களது தலையில் வைத்து எடுத்துச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும்,ஒரு சிலிண்டருக்கு 50 ரூபாய் வரை அதிகம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சி ஊழியர்கள் இப்படி வயதானவர்களை சிரமப்படுத்துவது மிகுந்த கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது . மேலும்,நாளை முதல் விடுமுறை எனவும் அறிவித்துள்ளது.கேஸ் சிலிண்டர் விநியோகிக்க எந்த தடையுமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தனியார் ஏஜென்சியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை அவதியடைய செய்துள்ளது.
இதனால் நாளை முதல் விடுமுறை என அறிவித்துள்ள தனியார் கேஸ் ஏஜென்சி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







