சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய ஆய்வாளர்
நாகை மாவட்டத்தில் உணவின்றி தவித்த சாலையோர வாசிகளுக்கு நாகூர் காவல் நிலைய ஆய்வாளர் தனது சொந்த செலவில் உணவு வழங்கினார். ஊரடங்கு உத்தரவால் நாகூர் தர்கா பகுதியில் ஆதரவற்ற முதியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உணவு இல்லாமல் தவித்து வந்தனர்.
இதை அறிந்த நாகூர் காவல் நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் அங்கிருந்த 50க்கும் மேற்பட்டவர்களுக்கு தனது சொந்த செலவில் இரவு உணவு வழங்கினார்.முன்னதாக அவர்களது கைகளை கழுவ செய்தும் இலவசமாக முக கவசம் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.






