கொரொனா விழிப்புணர்வு மணல் சிற்பங்கள்!
மணல் சிற்பத்தின் மூலம் கொரொனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் பூரி பகுதியை சேர்ந்த பட்நாயக் பொதுமக்கள் சமூக விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி புவனேஸ்வரில் மணல் சிற்பங்களை வடித்துள்ளனர்.
அதில் கொரொனா தொடர்பான வதந்திகளை பரப்புவதில் இருந்து விலகி இருக்க வலியுறுத்தும் விதமாக வைரசுக்கு எதிரான யுத்தத்தை கண்டு பீதி அடைய வேண்டாம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் சிற்பங்களை வரைந்துள்ளார்.இதனைப் பாராட்டி இருக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகிற்கு வலுவான செய்திகளை சொல்ல கலை ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள சுதர்சன் பட்நாயக் உலக சுகாதார அமைப்பின் தலைவரிடமிருந்து பாராட்டு கிடைத்திருப்பது தனக்கு மிகப்பெரிய கவுரவம் என்று தெரிவித்துள்ளார்.







