மேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறியவர்களுக்கு போலீஸ் தடியடி!
மேற்குவங்கத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர். வாகனங்களில் சுற்றுவர்களை கண்டித்து காவல்துறையினர் டயர்களில் காற்று பிடுங்கி விட்டனர்.
கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் 7 யூனியன் பிரதேசங்கள் உள்பட 30 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் பல்வேறு கட்டுடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நாடே ஸ்தம்பித்து ஒரு விதமான அசாதாரண சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
கொரானோ முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வீட்டிலேயே இருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த, நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்கத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர். வாகனங்களில் சுற்றுவர்களை கண்டித்து காவல்துறையினர் டயர்களில் காற்று பிடுங்கி விட்டனர்.







