--- --:--:-- --

கொரானா பாதிப்பு அதிகம் உள்ளது..! அஜாக்கிரதை வேண்டாம்..! தீவிர முன்னெச்சரிக்கை தேவை..! அமைச்சர் விஜயபாஸ்கர் அபாய மணி !!

7

கொரானா பாதிப்பு அதிகம் இருப்பதால் மக்கள் அஜாக்கிரதையாக இருப்பதை கைவிட்டு தீவிர முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

 

கொரானா பாதிப்பு தமிழகத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 3 பேருக்கு மட்டுமே கொரானா தொற்று கண்டறியப்பட்டாலும், அதிதீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பிற மாநிலங்களுடனான எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தீவிர கண்காணிப்புக்கு ஆளாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரானா நிலவரம் குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுமக்களிடம் தீவிர முன்னெச்சரிக்கை தேவை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அவர் கூறுகையில், சமூக ரீதியில் கொரானா தொற்று ஏற்படவில்லை. ஆனாலும் கொரானா பாதிப்பு அதிகரிப்பதால் மக்கள் தீவிர முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொடர்ந்து வலியுறுத்தியும் மக்கள் அஜாக்கிரதையாக இருப்பது வருத்தமளிக்கிறது. நாளை மக்கள் ஊரடங்கு நாள் என்பது நமக்கான நாள். மக்கள் அனைவரும் இதனை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

 

மருத்துவமனைகளில் கொரானா சிறப்பு வார்டுகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரானா தடுப்பு மற்றும் மருத்துவ பணிகளுக்காக ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் பணிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon