--- --:--:-- --

தமிழகத்தில் நாளை அரசு மற்றும் தனியார் பேருந்து‌ ஓடாது: முதல்வர் அறிவிப்பு

1

நாளை பொதுமக்கள் தாமாகவேமுன்வந்து சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்றுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அன்றையதினம் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடாது என்றும் அறிவித்திருக்கிறார்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மிகவும் அத்தியாவசிய பணிகளை தவிரபொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 60 வயதிற்கு மேற்பட்டோர் வீட்டைவிட்டு வெளியில் செல்லக்கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

 

ஞாயிறு அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்றுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கொரொனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஞாயிறன்று மாலை 5 மணிக்கு மணியோசை மூலமும் கைதட்டியும் ஆதரவு தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்கள் பதற்றத்துடன் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்பது உள்ளிட்ட 9 அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஞாயிறு காலை 7 மணி முதல் 9 மணி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடாது என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

 

ஞாயிறன்று புதுச்சேரியிலும் பேருந்துகள் இயங்காது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon