காவல் ஆய்வாளர் வேலைக்காரியின் அசிங்கம்! சிசிடிவியில் பதிவான காதல் முத்தம்! ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர்!
தூத்துக்குடியில் சிபிசிஐடி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சபிதா. இவரது கணவர் நெல்லையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களது வீட்டில் வேலைபார்த்து வந்த மாரியம்மாள் என்ற பெண் தன் மீது பெண் காவல் ஆய்வாளர் திருட்டு பழி சுமத்தியதாகவும், நியாயம் கேட்க வந்த தனது சகோதரன் சங்கரையும் சென்னையில் காவல் ஆய்வாளர் சபிதா தாக்கியதாகவும் கூறி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக படுத்துக்கொண்டார்.
தனது சகோதரர் சங்கரை காவல் ஆய்வாளர் சபிதா தாக்கியதாக கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இதன் பின்னணி குறித்து காவல் ஆய்வாளர் சபிதா விசாரித்தபோது அவர் இல்லாத நேரத்தில் வீட்டில் வேலை பார்த்து வந்த வேலைக்காரியின் விபரீதங்கள் வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த 7ஆம் தேதி காவல் ஆய்வாளர் சபிதா அவரது கணவர் ஆகியோர் வேலைக்கு சென்றுவிட இரண்டு குழந்தைகளும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து மீண்டும் டியூஷனுக்கு சென்று விட்டுள்ளனர்.
அதன் பின்னர் ஒரு மார்க்கமான வேலைக்காரி ஆகியுள்ளார் மாரியம்மாள். முதலில் அங்கு நடக்கின்ற அசிங்கங்கள் சிசிடிவியில் பதிவாகி விடக்கூடாது என்று அதி புத்திசாலித்தனமாக சிசிடிவி மானிட்டரை சுவிட்ச் ஆப் செய்துள்ளார் மாரியம்மாள். பாவம் சிசிடிவி மானிட்டரை சுவிட்ச்ஆப் செய்தாலும் கேமராவில் காட்சிகள் பதிவாகும் என்பது மாரியம்மாளின் புத்திக்கு எட்டவில்லை.
சற்று நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் தலையில் ஹெல்மெட் உடன் முரட்டு ஆள் ஒருவன் வேலைக்காரியை தேடி வீட்டிற்கு வருகிறான். அவனை அழைத்துக்கொண்டு வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற வேலைக்காரப் பெண் சமையல் நுணுக்கங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. அதற்குள்ளாக புத்தகத்தை மறந்து விட்டு சென்றதாக கூறி பெண் காவல் ஆய்வாளரின் மகன் வீட்டிற்கு வந்துள்ளார்.
திருடனுக்கு தேள் கொட்டியது போல மிரண்டுபோன வேலைக்காரி அவனை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து அலைக்கழித்துள்ளார். அதற்குள்ளாக மாரியம்மாளுடன் ஆலோசனை நடத்த வந்த ஆபீஸர் சமையலறைக்குள் சென்று பதுங்கி கொண்டுள்ளார். அதன்பின்னர் சிறுவனை வீட்டிற்குள் அனுமதித்துள்ளனர்.

சிறுவன் புத்தகங்கள் எடுத்துச் சென்ற பின்னர் மீண்டும் வேலைக்காரியுடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்த அந்த முரட்டு ஆள் வெளியில் வந்து வேலைக்கார பெண்ணுக்கு சில காதல் முத்தங்களை பரிசளித்துவிட்டு சென்றுள்ளார். தான் செய்த காதல் சேட்டைகள் யாருக்கும் தெரியாது என்று மாரியம்மாள் மகிழ்ந்திருக்க புத்தகம் எடுக்கச் சென்ற சிறுவன் வீட்டு வாசலில் கழற்றி போடப்பட்டிருந்த காலணியை வைத்து வீட்டிற்குள் வேறு யாரோ இருக்கின்றன என்பதை கண்டுபிடித்து தனது தாய், தந்தையரிடம் போட்டுக் கொடுக்க அந்த அசிங்கங்களை காட்டிக் கொடுத்துவிட்டது சிசிடிவி.
இதேபோன்று பல நாட்கள் நடந்து இருப்பதை அறிந்த காவல் ஆய்வாளர் வேலைக்காரியை விசாரித்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்து சென்றவர் சங்கர் என்றும் அவருடன் சேர்ந்து வீட்டில் இருந்த நகை, பணத்தை திருடியது தெரிய வந்துள்ளது. போலீசில் வேலைக்காரி மீது புகார் அளிக்கப்பட்டதை தெரிந்துகொண்ட வேலைக்காரியின் காதலன் சங்கர் பஞ்சாயத்து பேச தனது ஆதரவாளர்களுடன் காவல் ஆய்வாளரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சங்கரை இழுத்துப் பிடித்து ஏறி மிதித்த காவல் ஆய்வாளர் சபிதா அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து உள்ளார். இதுகுறித்து திருட்டில் ஈடுபட்ட மாரியம்மாள் மற்றும் அவரது காதலன் சங்கர் மீது திருட்டு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிசிடிவி கேமரா மட்டும் அங்கு இல்லை என்றால் காவல் ஆய்வாளர் சபீதா அராஜக பேர்வழியாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பாள் என்று கூறப்படும் காவல்துறையினர் ஒருவேளை வேலைக்காரரின் காதலனை திடீரென வீட்டிற்கு சென்ற சிறுவன் பார்க்க நேர்ந்திருந்தால் ஏதேனும் விபரீதம் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் சங்கரை தாக்கிய காவல் ஆய்வாளர் நடத்தை விதிமுறைகளை மீறியதாக காவல் ஆய்வாளர் சபிதா பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




