கர்நாடகத்தில் கொரொனா பீதி காரணமாக 6 ஆயிரம் கோழிகள் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவத்திற்கு சமூகவலைதளத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. டுவிட்டர் சமூக வலைதளத்தில் அந்த வீடியோ நிரஞ்சன் காக்கரே என்பவரால் பகிரப்பட்டுள்ளது.
அதில் மிகப்பெரிய அளவில் குழி ஒன்று தோன்ற பட்டிருக்கும் காட்சியும் அந்த குடிக்கும் லாரியில் உயிருடன் கொண்டுவரப்பட்ட கோழிகள் கொட்டப்படும் காட்சியும் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ வெள்ளக்காவில் உள்ள இடத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காட்சியை கண்ட ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் தங்களது கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.