--- --:--:-- --

காங்கிரசிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா..! பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின் அதிரடி முடிவு!!

IMG_20200310_140525

மத்திய பிரதேச மாநில காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்த அடுத்த நிமிடம் ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வது உறுதியாகியுள்ளது.

 

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா . இவர் மத்திய பிரதேசத்தின் குவாலியர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர். ராகுல் காந்தியின் நெருக்கமான நண்பரும் கூட. இவரது தந்தை மாதவரால் சிந்தியாவும் காங்கிரசில் முக்கிய தலைவராகவும் முன்னாள் பிரதமர் ராஜீவின் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர். இப்படி காங்கிரசில் சிந்தியா குடும்பம் முக்கிய பங்கு வகித்து வந்தது.

 

கடந்த 2018 தேர்தலில் ம.பி.யில் காங்கிரஸ் வெற்றிக்கு காரணமாகவும் இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதல்வர் பதவி கிட்டாமல் போக கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். தொடர்ந்து உதாசீனம் செய்யப்பட்டதால் வேறு வழியின்றி காங்கிரசை உதறித் தள்ள முடிவு செய்தார். காங்கிரசிலும் கலகம் விளைவிக்க தயாரானார்.

 

தனதுஆதரவுஎம்எல்ஏக்கள் 17 பேருடன் 2 நாட்களுக்கு முன் ஜோதிராதித்ய சிந்தியா மாயமானார். கடைசி நேரத்தில் காங்கிரஸ் மேலிடம் அவரை சமாதானம் செய்ய முயற்சிகள் மேற்கொண்டது.

ஆனால் அதற்கெல்லாம் பலன் இல்லை என்பது போல், இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை திடீரென இந்தியா சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சந்திப்பு முடிந்த சில நிமிடங்களில் காங்கிரசிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்த கடிதம் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

காங்கிரசின் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஏராளமான குற்றச்சாட்டுகளை சிந்தியா முன்வைத்துள்ளார்.கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகவே கட்சியில் தாம் அவமானங்களை சந்தித்து வருவதாகவும், இனியும் காங்கிரசில் நீடித்தால் மக்கள் பணியாற்றுவது இயலாத ஒன்றாகிவிடும், எனவே நான் என் வழியில் மக்கள் பணியாற்ற முடிவு செய்து, காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன் என சிந்தியா குறிப்பிட்டுள்ளார்.

 

இதனால் சிந்தியா பாஜகவில் சேர்வது உறுதியாகியுள்ளது. அவரது பின்னால் 38 எம்எல்ஏக்கள் விலகும் பட்சத்தில் மத்தியப் பிரதேச காங்கிரசில் பிளவு ஏற்படுவது உறுதி. காங்கிரஸ் அரசும் கவிழ்வது உறுதி. இந்நிலையில், சிந்தியாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் சோனியா ஆலோசனை நடத்த, ம.பி.மாநில அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon