--- --:--:-- --

ஒருதலைக் காதல் பெண்ணைக் கடத்த முயற்சி! மாட்டிக்கொண்ட இளைஞன்!

12

நாமக்கல்லில் ஒரு தலை காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்த முயன்றதாக கூறப்படும் நபரை பிடித்து பொதுமக்கள் அடித்து உதைத்தனர். தூசுரை சேர்ந்த அந்த பெண் சேலம் அம்மாபேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பூவராகவன் என்பவர் நட்பாக பழகி உள்ளார்.

 

நாளடைவில் காதலிப்பதாக கூறி தொல்லை செய்தவனை அப்பெண் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நண்பர்களான செந்தில் மற்றும் குமார் ஆகியோருடன் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே வைத்து அப்பெண்ணை ஆட்டோவில் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

 

பெண்ணின் கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடவே பூவராகவன் நண்பர்கள் தப்பியோடி விட குமார் மட்டும் சிக்கியுள்ளார். அவனை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon