--- --:--:-- --

தமிழக அரசுப் பள்ளிகள், அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு ரத்து!!

fgj

கொரானோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், கல்வி அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை தற்காலிகமாக ரத்து செய்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

கொரானே வைரஸ் கிருமி கைகள் மூலம் பரவுவதால், மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் 31-ந் தேதி வரை பயோ மெட்ரிக் வருகைப் பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்தது.

 

தமிழகத்திலும் தற்போது கொரானோ வைரஸ் தொற்று றிகுறி உறுதி செய்யப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்திலும் அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனர் சா.அருணன், இதே கோரிக்கையை தமிழக அரசுக்கு விடுத்திருந்தார்.

 

இந்நிலையில், தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் இன்று முதல் வரும் 31-ந்தேதி வரை பயோமெட்ரிக் வருகைப் பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்காலிக ஏற்பாடாக வருகைப் பதிவு புத்தகத்தில் ஆசிரியர்கள், அலுவலர்கள் கையெழுத்து போட அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon