--- --:--:-- --

ஏ‌டி‌எம்-இல் பெண்களிடம் கைவரிசை காட்டிய பெண்ணுக்கு வலை..!

11

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் எஸ்பிஐ ஏடிஎம்மிற்கு வந்த பெண்களை ஏமாற்றி அவர்களுடைய வங்கி கணக்கில் பணத்தை எடுத்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். அனு என்பவர் தனது தாயாருடன் மகளிர் சுய உதவி குழு மூலம் கிடைத்த பணத்தை எடுக்க புதிய ஏடிஎம் அட்டையுடன் வந்துள்ளார்.

 

அப்போது அங்கு இருந்த பெண் எடிஎம் அட்டையை வாங்கி உதவுவது போல நடித்து பிறகு பணம் வரவில்லை எனக்கூறி நைஸாக உண்மையான ஏ‌டி‌எம் அட்டையை வைத்துக்கொண்டு வேறொரு அட்டையை கொடுத்துள்ளார். இதை அறியாமல் அணுவும்ம் தாயாரும் சென்றதும் அதை வைத்து 34 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார்.

 

பணம் எடுக்கப்பட்ட குறுந்தகவல் வந்ததால் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் சிசிடிவி காட்சியை கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. ஏற்கனவே மூன்று பெண்களிடமும் கைவரிசை காட்டியது தெரியவந்ததால் அப்பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon