--- --:--:-- --

சசிகலா விடுதலைக்குப் பின் தமிழக அரசியலில் பெரும் மாற்றம்…! சுப்பிரமணிய சாமி சொல்கிறார்!!

10

சசிகலா விடுதலையானால் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் வரும் என்றும், சசிகலாவை விடுத்து அரசியல் செய்வது கஷ்டம் எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமண்ய சுவாமி தெரிவித்துள்ளார்.

 

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமண்ய சுவாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் , சி.ஏ.ஏ.வால் எந்த பிரச்னையும் இல்லை ; யாருடைய குடியுரிமையையும் பறிக்க போவதில்லை எனவும்,பல நாட்டினருக்கு நம் நாட்டின் பெயரை கெடுக்க ஆர்வம் உள்ளது; இந்துக்கள் ஒற்றுமையை கெடுக்க நாட்டின் பெயரை கெடுப்பதற்கே சிலர் சதி செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

 

மேலும்,நாட்டை விட்டு முஸ்லிம்கள் விரட்டிக்கப்படுவார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? என கேள்வியெழுப்பிய அவர், நாட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. சரி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

ரஜினிகாந்த் இந்து மதத்திற்காக சோ விழாவில் பேசினது போன்று எதிர்காலத்தில் பேசினால் ஒத்துழைப்பு கொடுப்பேன் எனவும்,பா.ஜ.க தனிமையாக நின்று ஜெயிக்க முடியும்; ஆனால் அதற்கான முயற்சி செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

 

அ.தி.மு.க.வை பா.ஜ.க இயக்குகிறது என்ற கேள்விக்கு அதுபோன்று தெரியவில்லை எனவும்,
ஜனநாயக நாட்டில் போராட்டம் செய்யலாம்; அச்சமுண்டாக்கி பொய் சொல்லி ஆர்பாட்டம் செய்யக்கூடாது என்றார்.

 

மேலும்,சசிகலா விடுதலையானால் அரசியலில் பெரிய மாற்றம் வரும். சசிகலாவை விடுத்து அரசியல் செய்வது கஷ்டம் என ஆரூடம் தெரிவித்த சுப்பிரமணியசாமி, தமிழ்நாட்டில் சினிமா தான் பார்ப்பார்கள். சட்டம் படிக்க மாட்டார்கள் எனவும், கமல் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு யார் அவர் என நக்கலாக பதிலளித்தார்.

Leave a Reply

Right Menu Icon