உடல் எடையை கூட்டி ஃபிட்டாக இருக்கும் ஹர்திக் பாண்டியா
எந்தவித குறுக்கு வழியும் இன்றி அயராத பயிற்சியால் மூன்று மாதங்களில் 7 கிலோ அளவிற்கு உடல் எடை அதிகரிப்பதாக ஹர்திக் பாண்டியா பதிவிட்ட புகைப்படம்தான் இது. சர்ச்சைகளுக்கும் சாதனைகளுக்கும் பஞ்சமில்லாத நபராக அறியப்படும் ஹர்திக் சமரசமில்லாத போராட்ட குணத்தை பெற்றுள்ளார். சில வீரர்களின் காயம் அவர்களுக்கு மட்டுமில்லாமல் அணிக்கு பெரும் தாக்கத்தை உருவாக்கி விடுகிறது.
காயத்தால் ஹர்திக் பாண்டியா விளையாடாத நிலையில், அவருக்கு பதிலாக இந்திய அணியில் களமிறக்கப்பட்ட சிவன் உள்ளிட்ட வீரர்கள் குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இது நியூசிலாந்துக்கு எதிராக இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தொடர்ந்து. அதில் மூன்று துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் வைரலானது இந்தியா.
இந்தநிலையில் காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்டியா டி20 தொடரில் ரிலையன்ஸ் ஒன் அணிக்காக களம் கண்டார். முதல் போட்டியில் 4 இமாலய சிக்சர் உட்பட 38 ரன்கள் விளாசியதோடு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது வருகையை பதிவு செய்தார். இரண்டாவது போட்டியில் 37 பந்தில் அதிரடி சதம் அடித்து ருத்ரதாண்டவம் ஆடினார் ஹர்திக் பாண்டியா.
இதில் 7 பவுண்டரிகள் 10 சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த செப்டம்பர் மாதத்திற்குப் பின் விளையாடாத ஹர்திக் காயத்திலிருந்து மீண்டு ஃபார்மில் இருப்பதை நிரூபித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர் நோக்கும் ஐபிஎல் தொடரிலும் இவரின் அதிரடி ஆட்டங்கள் அரங்கேறும் என்பதில் சந்தேகமில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




