--- --:--:-- --

மூளைச்சாவு அடைந்த பேராசிரியையின் உடலுறுப்புகள் 7 பேருக்கு தானம்..!

13

விபத்தில் சிக்கி மூளைச் சாவடைந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியை ஒருவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள ஏழு பேருக்கு கொண்டு செல்லப்பட்டன.

 

கல்லக்குறிச்சி மாவட்டம் தியாதுருகத்தை சேர்ந்த கனிமொழி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.கடந்த 27 ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க பெற்றோர் முன்வந்தனர்.

 

இதையடுத்து மீனாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கனிமொழியின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் அகற்றப்பட்டு சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon