அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் ஜிஎஸ்எல்வி-எஃப்10 ராக்கெட்
ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு மற்றும் வானிலை ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள் மார்ச் மாதம் ஐந்தாம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஜிசாட்-1 செயற்கைக் கோளை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி- எஃப்10 ராக்கெட் 14வது முறையாக விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து மார்ச் மாதம் ஐந்தாம் தேதி மாலை 5.43 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
2775 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் புவியை கண்காணிக்கவும், வானிலை ஆய்வுக்காக விண்ணில் நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.






