--- --:--:-- --

மார்ச் 2ம் தேதி களம் இறங்கும் தோனி ..ரசிகர்களின் விசில் பறக்குமா?

5

பரபரப்புகளுக்கும் விருவிருப்புகளுக்கும் சிறிது பஞ்சமில்லாத ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி தொடங்குகிறது. போட்டிக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது முதல் மகேந்திர சிங் தோனியின் வருகை குறித்து ரசிகர்கள் உற்சாகம் கலந்த பல எதிர்பார்ப்புகளுடன் காத்துள்ளனர்.

 

காரணம் சென்ற ஆண்டு நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் சுமார் ஏழு மாதங்களுக்கும் மேலாக அவரை களத்தில் காணாத ஏக்கமே. சிறிய ஓய்வுக்குப் பின்னர் அடுத்தடுத்த தொடர்களில் அணிக்கு திரும்பி விடுவார் என்று ரசிகர்கள் எண்ணியிருந்த நிலையில் அனைத்தும் யூகங்களாகவே கடந்து சென்றன.

 

ஐபிஎல் ஃபார்மை பொறுத்தே 20 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவரது இடம் உறுதி செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியது ரசிகர்களுக்கு கூடுதல் ரணம். இதனால் ஐபிஎல் பயிற்சி களத்திற்கு தோனி எப்போது வருவார் என்று அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சம் தொட்டது.

 

இந்நிலையில் தோனியின் ஆட்டத்தை காணாமல் வறண்ட பாலைவனம் போல இருந்த ரசிகர்களின் மனநிலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் அளித்துள்ள ஒரு தகவலால் வசந்தம் பெற்றுள்ளது. மார்ச் 2-ஆம் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி ஐ‌பி‌எல்க்கான பயிற்சியில் இறங்கப் போகிறார் என்பதே அந்த தகவல்.

 

கடந்த ஐபிஎல் சீசனுக்கான பயிற்சியின் போது மைதானத்தில் தோனிக்கு ரசிகர்கள் அளித்த ஆரவாரமான வரவேற்பு மெரினா அரங்கை அதிர வைத்தது. சென்னை சூப்பர் கிங் சிங்கங்களின் குகைஎன்று வர்ணிக்கப்படும் சேப்பாக்கம் மைதானம் ரசிகர்களின் ஆரவாரமான கர்ஜனையுடன் இருக்குமா என்பதை மார்ச் 2-ஆம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon