--- --:--:-- --

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து சரித்திரம் படைப்போம் மோடியுடனான சந்திப்புக்குப் பின் டிரம்ப்

8736d11d-3ba8-4ea2-826b-241ddf13264a

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து சரித்திரம் படைக்க தயாராகிறோம் என பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பின் டொனால்டு டிரம்ப் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவுக்கு 2 நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் .நேற்று அகமதாபாத் , ஆக்ரா ஆகிய இடங்களுக்கு சென்ற டிரம்ப், இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்தார். பின்னர் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வான பிரதமர் மோடியுடனான சந்திப்பில் பங்கேற்றார்.

 

டெல்லியில் உள ஐதராபாத் இல்லத்தில் இருவரும் நீண்ட நேரம் பேசினர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பிரதமர் மோடியும், டிரம்ப்பும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது டிரம்ப் கூறியதாவது:

 

இரு நாட்டு மக்களையும் பாதுகாப்பது குறித்து மோடியுடன் விவாதித்தேன். தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்தும் இருவரும் நீண்ட விவாதம் நடத்தினோம். சைபர் செக்யூரிட்டி மற்றும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் பேசினோம். இரு நாடுகளும் இணைந்து சரித்திரம் படைக்க தயாராகிறோம்.

 

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வது குறித்தும் அங்கிருந்து இறக்குமதி செய்வது குறித்தும் விவாதித்தோம். இந்தியாவில் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் பிரதிநிதியை நியமிக்க முடிவு செய்துள்ளோம். இருநாடுகளும் இணைந்து புதிய சரித்திரம் படைக்க தயாராகி வருகிறோம்’ இந்த சந்திப்பின் மூலம் ஆக்கப்பூர்வமான பல விஷயங்கள் நடைபெறும் என டிரம்ப் தெரிவித்தார்.

 

இந்த பேச்சுவார்த்தையின் போது மீண்டும் இந்தியா வர அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அழைப்பு விடுத்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon