அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டும் என ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும்
புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரியில் ஏழைகளுக்கு பயனளிக்கும் வகையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி எடை குறைவாக உள்ளதால் அரிசிக்கு பதிலாக பயனாளிகளுக்கு ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க வேண்டுமென்று கிரண்பேடி உத்தரவு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்த மனுவையும் தள்ளுபடி செய்தது.
அரிசிக்கு பதிலாக பயணிகளுக்காக பணத்தை வங்கி கணக்கில் செலுத்தலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.





