--- --:--:-- --

அவிநாசி அருகே அரசுப் பேருந்து – கன்டெய்னர் லாரி மோதி கோர விபத்து. ! 20 பேர் பலியான சோகம்!!

IMG-20200220-WA0028

அவினாசி அருகே கேரள அரசுப் பேருந்து மீது கன்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் 4 பெண்கள் உட்பட 20 பேர் பலியான கோர விபத்து நடந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரள அரசுக்கு சொந்தமான சொகுசுப் பேருந்து ஒன்று 49 பயணிகளுடன் பெங்களூருவில் இருந்து ஆலப்புழைக்கு நேற்றிரவு புறப்பட்டு சேலம் – கோவை சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.

இன்று அதிகாலை அவிநாசி அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, எதிரே சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த டைல்ஸ் ஏற்றிய கன்டெய்னர் லாரி ஒன்று அதிவேகத்தில் மோதியது. இதில் பேருந்து சின்னாபின்னமாகி, பயணிகள் இடிபாடுகளில் சிக்கி பரிதவித்தனர்.

 

அக்கம் பக்கம் உள்ளவர்களும், தீயணைப்பு படையினரும் 3 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக போராடி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் பேருந்துக்குள்ளேயே 3 பெண்கள் உட்பட 10 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

எஞ்சிய 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் மேலும் 10 பேர் உயிரிழக்க பலி எண்ணிக்கை 20 ஆனது. இன்னும் சிலர் உயிருக்கு போராடி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

 

பலியானவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்தக் கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon