ரெட் லைட் ஏரியா மாதிரி டிவி நடத்துகிறார்கள்.பத்திரிக்கையாளர்கள் குறித்த தி.மு.க அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் வரம்பு மீறிய பேச்சுக்கு சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் !!!
சென்னையில் நடந்த கலைஞர் வாசகர் வட்ட நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க- வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பத்திரிக்கையாளர்களை கேவலமாக பேசி உள்ளார்.இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.
இதில் பேசியுள்ள ஆர்.எஸ்.பாரதி டி.விக்காரங்கள மாதிரி அயோக்கிய பயலுக்கள் உலகத்திலேயே ஒருத்தனும் கிடையாது.மும்பையில் உள்ள ரெட் லைட் ஏரியா மாதிரி டி.வி நடத்துகிறார்கள்.காசு வருகிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் வெளியிடுகிறார்கள்.பிரசாந்த் கிஷோர் மோடிக்காகவும்,அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் வேலை செய்தார்.அதையெல்லாம் போடவில்லை.திமுக-விற்கு வேலை செய்யும் பொழுது மட்டுமே அதுக்கு ஒரு விவாத மேடை போடுறானுங்க.தளபதி ஸ்டாலின் கோவிலுக்கு போனா,அவர் குடும்பத்தினர் கோவிலுக்கு போனா அதையும் போடுறாங்க…என்று பத்திரிக்கையாளர்கள் மிக கேவலமாக வசைபாடியுள்ளார்.
இதற்கு சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் தனது கடும் கண்டனத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.தி.மு.க- வின் அமைப்பு செயலாளர் மூத்த அரசியல் வாதியான ஆர்.எஸ்.பாரதி தரம் தாழ்ந்து இப்படி கீழ்த்தரமாக பேசியிருப்பதை கண்டிப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,பத்திரிக்கையாளர்கள் குறித்த ஆர்.எஸ்.பாரதியின் இந்த வரம்பு மீறிய பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும்,தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
மேலும்,பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல எனவும்,விமர்சனங்களை ஏற்பதாகவும்,இதுபோன்ற தரம் தாழ்ந்த பேச்சுக்களை பொது வாழ்வில் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





