--- --:--:-- --

கொரானா பாதிப்புகளை வெட்ட வெளிச்சமாக்கிய இருவர் மாயம்

5

சீனாவின் உகான் நகரில் கொரோனா பாதிப்புகளை ஆவணப்படுத்திய இருவர் மாயமாகியுள்ளனர். உகான் நகரைச் சேர்ந்த பேன்பென் என்பவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றின் ஆம்புலன்சில் இருந்த உடல்களை எண்ணிவிட்டு இத்தனை உடல்களா என தேம்புவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது போன்ற பல்வேறு வீடியோக்களை வெளியிட்ட பேன்பென் பின் மாயமானார்.

 

அதேபோன்று உகான் நகரில் நெஞ்சை உருக்கும் வீடியோக்களை வெளியிட்ட இளம் வழக்கறிஞரான சென்ஷி என்பவரும் மாயமாகியுள்ளார். அவர்கள் அரசால் வலுக்கட்டாயமாக தனிமைச் சிறையில் வைக்கப்பட்டு இருக்கக்கூடும் என அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

 

சீன அரசு கொரோனா பாதிப்பின் தீவிரத்தை குறைத்து காட்டுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் பாதிப்புகளை அம்பலப்படுத்தியவர் மாயமான விவகாரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon