காதலர்கள் சாக்லேட் தினம் கொண்டாடியது போல..சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்த முதலமைச்சர்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காரில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாலையோரம் நின்றிருந்த சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நேற்று தலைவாசல் அருகே தனியார் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேவியார் குறிச்சியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் நின்று இருந்த சிறுவர்கள் முதலமைச்சரை கண்டதும் கைகளை அசைத்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இதனை கண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி யாரும் எதிர்பாராத நிலையில் ஓட்டுநரிடம் காரை உடனடியாக நிறுத்த சொல்லி அங்கிருந்து சிறுவர்கள் மற்றும் பெண்களை அழைத்து சாக்லேட்டுகளை வழங்கி மகிழ்வித்தார்.





