--- --:--:-- --

டெல்லியில் ஆட்சியை தக்க வைப்பாரா கெஜ்ரிவால் ? – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!!

1

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மியின் அர்விந்த் கெஜ்ரிவால் மீண்டும் அரியணை ஏறுவாரா? என்பது வரும் 11-ந் தேதி தெரிந்துவிடும்.

 

டெல்லி முதல்வராக 5 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார் அர்விந்த் கெஜ்ரிவால். டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் இம்மாதம் 20-ந் தேதியுடன் முடிவடையும் நிலையில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

 

இந்தத் தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக, டெல்லியில் 1999 முதல் 2014 வரை தொடர்ந்து ஆட்சி புரிந்த காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாத்தின் கடைசி கட்டத்தில் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், காங்க ரசுக்கு ஆதரவாக முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

 

இந்தத் தேர்தலில் பாஜகவும், காங்கிரசும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், முதல்வராக இருக்கும் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க பிரச்சாரத்தில் தீவிரமாக வலம் வந்தார். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளிலும், ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு டெல்லியில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கடும் குளிர் மற்றும் பனி காரணமாக காலை 7 மணிக்குப் பதிலாக 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவை ஒட்டி பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இன்று வாக்குப்பதிவு முடிந்தவுடன், வரும் 11-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கெஜ்ரிவால் மீண்டும் முதல்வர் அரியாசனம் ஏறுவாரா? என்பது 11-ந் தேதி தெரிந்துவிடும்.

Leave a Reply

Right Menu Icon