டெல்லியில் தேர்தல் நடைபெறும் நிலையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுப்படுகொலை
டெல்லியில் இன்று தேர்தல் நடைபெறும் நிலையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். பட்பர்கஞ் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பிரீத்தி என்பவர் பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு ரோகிணி எனுமிடத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் ப்ரீத்தி சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ரோகினி பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் ப்ரீத்தியை தலையில் சுட்டுக் கொன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்விடத்திலிருந்த அனைத்து சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் பெண் உதவி ஆய்வாளர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






