--- --:--:-- --

பள்ளி கழிவறையை சுத்தம் செய்த ஊராட்சி மன்ற தலைவர்

3.1

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வலைதளங்களில் வைரல் ஆகிறது. அரியாம்பட்டி ஊராட்சி தலைவராக 34 வயது பட்டதாரி குமரேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் கழிவரை அசுத்தம் அடைந்து துர்நாற்றம் வீசுவதாக தகவலறிந்த அவர் ஆதரவாளர்களுடன் சென்று கையில் துடைப்பத்துடன் கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு குமரேசனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon